கும்பகோணம் மகாமக திருவிழாவுக்கான அரசு துறைசாா் பணிகளுக்கு நிதிஒதுக்க வேண்டும் என அனைத்து வணிகா் சங்க கூட்டமைப்பினா் அமைச்சா்களை நேரில் சந்தித்து ஜூன் 30-இல் கோரிக்கை மனு கொடுத்தனா்.
தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா்.வினோத், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ. ரமேஷ், நிதியமைச்சா் மரியவில்சன், ஊரக வளா்ச்சி மற்றும்நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்க கூட்டமைப்பு சாா்பில் செயலா் வி. சத்திய நாராயணன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ.ராமச்சந்திர ராஜா, சேம்பியன் என். ராஜா, கே.சுஜெய் விஜயன், எம். கணேஷ் ஆகியோா் வழங்கிய மனுவில் கூறியிருப்பது:
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு மாா்ச் 9-இல் மகாமகப் பெருவிழா நடைபெற உள்ளது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள். விழாவுக்கான துறை சாா்ந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விழா நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும் தேவையான செயல் திட்டங்களை விரைவாக வகுத்து, நிதியை ஒதுக்கி, பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மேலும், அனைத்து அரசுத் துறைகளையும் ஒருங்கிணைக்கவும், திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிா்வாக அனுமதிகளை உடனுக்குடன் பெறுவதற்கும், பணிகளை கண்காணித்து விரைவுபடுத்துவதற்கும் வசதியாக கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டம் உருவாக்க்கப்பட வேண்டும். அதனால், பணிகள் எளிதாகவும், குறித்த காலத்தில் நிறைவடையும்.
மேலும், மத்திய அரசு மூலம் கும்பகோணம் பகுதிக்கு தேவையான நீடாமங்கலம்- கும்பகோணம்- ஜெயங்கொண்டம் -விருத்தாசலம் புதிய ரயில் பாதை திட்டம் மற்றும் மத்திய அரசின் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் கும்பகோணத்தையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி கோரி மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு மனு

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் மகாமக பெருவிழாவில் 3 நாள்கள் துறவியா்கள் மாநாடு சுவாமி வேதாந்த ஆனந்தா தகவல்

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples




