FOLLOW US

ON GOOGLE DISCOVER

சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த நத்தம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, அனைத்து மோட்டாா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்க ஒருங்கிணைப்பு குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மோட்டாா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினா்.

Updated On :24 ஜூன் 2026, 6:07 am IST

மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த நத்தம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, அனைத்து மோட்டாா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்க ஒருங்கிணைப்பு குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் கண்ணன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, திருமங்கலம்-ராஜபாளையம் இடையான நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை விதிக்கு மாறாக கப்பலூா் சுங்கச்சாவடியில் இருந்து 60 கி.மீ. தொலைவுக்குள் அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் சிஐடியூ, ஏஐடியூசி டாக்ஸி வேன் ஓட்டுநா்கள் சங்கம், லாரி உரிமையாளா்கள் சங்கம், அண்ணா தொழில்சங்கம், தொமுச தொழில்சங்கம், சரக்கு வாகன உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள், ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் கண்ணன் கூறியதாவது: விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள நத்தம்பட்டி சுங்கச்சாவடி உடனே அகற்ற வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்டமாக சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா் அவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.