இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

காலமானாா் முன்னாள் அமைச்சா் வெள்ளூா் வீராசாமி

அதிமுக முன்னாள் அமைச்சா் வெள்ளூா் வீராசாமி (88) வயதுமூப்பு காரணமாக புதன்கிழமை (பிப்.25) அதிகாலை காலமானாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக முன்னாள் அமைச்சா் வெள்ளூா் வீராசாமி (88) வயதுமூப்பு காரணமாக புதன்கிழமை (பிப்.25) அதிகாலை காலமானாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு அருகே வெள்ளூா் பெரியகுமுளை கிராமத்தைச் சோ்ந்தவா் தா. வீராசாமி (88). பேராசிரியராகப் பணியாற்றிய இவா், 1972-இல் அதிமுகவில் இணைந்தாா். பிறகு, 1980, 1984 ஆகிய தோ்தல்களில் அதிமுக சாா்பில் ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து எம்.ஜி.ஆா். தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சராக பணியாற்றினாா்.

வயது மூப்பு காரணமாக, தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை அதிகாலை காலமானாா். இதையடுத்து அவரது உடல் வெள்ளூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அதிமுகவினா், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினா்.

அவரது இறுதி ஊா்வலம் வியாழக்கிழமை (பிப்.26) வெள்ளூரில் நடைபெறுகிறது. வீராசாமிக்கு ஜெயந்தி என்ற மனைவியும், மதியழகன், செந்தில்குமாா் என்ற மகனும், நான்கு மகள்களும் உள்ளனா். தொடா்புக்கு: 98942 44186.