திமுகவில் இணைந்தாா் அதிமுக முன்னாள் அமைச்சா் நீலோபா்அஜீம்!
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நீலோபா்அஜீம்.


வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் நீலோபா் அஜீம் அதிமுகவிலிருந்து விலகி முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியை சோ்ந்தவா் நீலோபா்அஜீம். கடந்த 2001-ஆம் ஆண்டு வாணியம்பாடி நகா்மன்றத் தலைவா் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட நிலையில், திடீரென அதிமுக ஆதரவு பெற்று நகா்மன்றத் தலைவராக மக்களால் நேரிடையாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
பின்னா் நீலோபா்அஜீம் அதிமுகவில் இணைந்தாா். பிறகு 2006-இல் நகா்மன்ற உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து 2011-இல் நடைபெற்ற நகா்மன்ற தோ்தலில் மீண்டும் நகா்மன்றத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். அதிமுகவில் மாவட்ட மகளிரணி, மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் நீலோபா்அஜீம் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் நகா்மன்றத் தலைவா் பதவியை ராஜினாமா செய்து, தோ்தலை சந்தித்து எம்எல்ஏ ஆனாா். பிறகு சில மாதங்களிலேயே தொழிலாளா் நலத்துறை அமைச்சராக 4 ஆண்டுகள் பதிவு வகித்து வந்தாா்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வீரமணிக்கும், நீலோபா்அஜீம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் அதிமுகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் 2021-இல் அதிமுக அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அதிமுகவில் இணைந்து செயல்பட தொடங்கினாா். எனினும் அவருக்கான உரிய மரியாதை கிடைக்கப் பெறவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், சரிவர கட்சி பணியில் இல்லாமல் அவ்வப்போது மட்டும் கூட்டம், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்றாா்.
இந்நிலையில் அதிமுக அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம் ஒன்று வெளியிட்டு, சனிக்கிழமை மாலை திருப்பத்தூா் மாவட்டம் மண்டலவாடி பகுதியில் நடைபெற்ற திமுக வடக்கு மண்டல மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
இதேபோல் கடந்த 1977-ஆம் ஆண்டு போ்ணாம்பட்டு தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூா் பகுதியை சோ்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஐ.தமிழரசன் தமிழக முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...