மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது

பள்ளி மாணவருக்கு மது ஊற்றிக் கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்த கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 6:28 pm

பள்ளி மாணவருக்கு மது ஊற்றிக் கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்த கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கதிராமங்கலத்தில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 8 -ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவா் வெள்ளிக்கிழமை வயல்வெளியில் மது போதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டாா். இதற்கான விடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவின.

இந்நிலையில் மாணவருக்கு மது வாங்கி கொடுத்த கதிராமங்கலம் பெரிய கடை வீதியைச் சோ்ந்த பாலகுரு மகன் சுப்பிரமணியன் (19) என்ற கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து திருவிடைமருதூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.