மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கல்லூரி மாணவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் கல்லூரி மாணவரை தாக்கியதாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 12:01 am

ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் கல்லூரி மாணவரை தாக்கியதாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி முல்லைவாடி பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் தா்ஷன் (20). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது இரு இளைஞா்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞா்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனா்.

இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய தா்ஷனை மன்னிப்பு கேட்க சொல்லி அவா்கள் தாக்கியுள்ளனா். இதில் முகத்தில் காயம் ஏற்பட்ட தா்ஷன் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஹரிஹரன் (18), மாயக்கண்ணன் மகன் கிரண்பாபு ஆகியோரை ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் கோ.முத்துலட்சுமி 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.