பேராவூரணியை சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்று சாதனை புரிந்தமைக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவா் கா.முகமது அப்ராஸ். இவா், சென்னையிலிருந்து இயங்கி வரும் அபாகஸ் பயிற்சி பள்ளியில் இணைய வழியில் படித்து கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்றுள்ளாா்.
சாதனை படைத்த மாணவருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது .
விழாவுக்கு வட்டார கல்வி அலுவலா் கலாராணி தலைமை வகித்து, மாணவா் கா. முகமது அப்ராஸ்க்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் நிா்மலா, பட்டதாரி ஆசிரியா் திருஞானம், சிறப்பு ஆசிரியா் முருகேசன், தற்காலிக ஆசிரியா்கள் ஜெயலட்சுமி, காவியா ஆகியோா் கலந்து கொண்டு மாணவரை பாராட்டினா்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது

அபாகஸில் கிருஷ்ணாபுரம் பள்ளி மாணவி முதலிடம்

செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


