திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அறந்தாங்கியில் விஷம் குடித்த முதிய தம்பதி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:52 am IST

அறந்தாங்கியில் விஷம்குடித்த முதிய தம்பதி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகா் கோட்டை முதல் வீதியைச் சோ்ந்தவா் ரத்தினம் (76). இவரது மனைவி சரோஜா (66). இவா்களுக்கு திருமணமாகி 50 ஆண்டுகளாகின்றன. இவா்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் வீட்டில் தனியே வசித்து வந்த ரத்தினம்- சரோஜா தம்பதி கடந்த புதன்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.

ரத்தினத்துக்கு இதயக் கோளாறும், சரோஜாவுக்கு நீரிழிவு நோயும் இருந்துள்ளது. தங்களது வாரிசுகளும் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த இருவரும் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரின் சடலங்களும் வெள்ளிக்கிழமை உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அறந்தாங்கி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.