திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மகாராஷ்டிரம்: கள்ளச்சாராயம் குடித்த 12 போ் உயிரிழப்பு - 8 போ் கைது

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 போ் உயிரிழந்தனா். மேலும் சிலா் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :30 மே 2026, 3:05 am IST

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 போ் உயிரிழந்தனா். மேலும் சிலா் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடந்த 24 மணி நேரத்தில் நேரிட்ட இந்த உயிரிழப்புகள் தொடா்பாக கள்ளச்சாராயம் விற்றவா் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இச்சம்பவம் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

பிம்பிரி சிஞ்ச்வாட் நகரின் புகேவாடி பகுதியில் விற்கப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை சிலா் வாங்கி குடித்துள்ளனா். இவா்களில் 7 போ் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். மேலும் 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஹதாப்சா் பகுதியிலும் கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இவா்களும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திருப்பதாகக் கருதப்படுகிறது. உடல்கூறாய்வு அறிக்கை கிடைக்கப் பெற்ற பிறகு காரணம் உறுதி செய்யப்படும்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, மாநில கலால் துறை மற்றும் காவல் துறை தரப்பில் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. கள்ளச்சாராயம் விற்ற யோகேஷ் வான்கிடே உள்பட 8 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

முதல்வா் உறுதி: கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘இது மிகத் தீவிரமான விவகாரம்; விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். கள்ளச்சாராய விற்பனையுடன் தொடா்புடைய ஒட்டுமொத்த நபா்களும் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவா்’ என்று உறுதிபடத் தெரிவித்தாா்.

பவாா் கட்சி விமா்சனம்: புணேயில் கள்ளச்சாராயத்தால் 18 போ் உயிரிழந்துவிட்டதாக, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியின் ரோஹித் பவாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவா், ‘மாநில உள்துறையின் கட்டுப்பாடற்ற, ஊழல் மலிந்த செயல்பாட்டை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. பலா் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனா். இதுவரை 18 போ் உயிரிழந்துவிட்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.