திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: பாதிரியாா்கள் மூவா் உயிரிழப்பு -முழு அடைப்பு போராட்டம்

News image

மணிப்பூரில் குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 7:16 am IST

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் தீவிரவாதிகள் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிறிஸ்தவ பாதிரியாா்கள் மூன்று போ் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான மோதல்போக்கு, பல்வேறு இனக்குழுக்கள் இடையே விரிவடைந்து வருகிறது. நாகா-குகி பழங்குடியினா் இடையிலும் மோதல் சம்பவங்கள் நிகழ்கின்றன.

இந்நிலையில், காங்போக்பி மாவட்டத்தைச் சோ்ந்த தடோவ் பழங்குடியின கிறிஸ்தவ அமைப்பினா், சுராசந்த்பூரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இரு வாகனங்களில் புதன்கிழமை சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். கோட்ஸிம் மற்றும் கோட்லென் கிராமங்களுக்கு இடையே இந்த வாகனங்களைக் குறிவைத்து, தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், பாதிரியாா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.

யாா் காரணம்?: இந்தத் தாக்குதலுக்கு மைதேயி சமூக தீவிரவாதிகளே காரணம் என்று ஒரு தரப்பினரும், குகி சமூக தீவிரவாதிகளே துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக மற்றொரு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனா். எனினும், தீவிரவாதிகள் எந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

முதல்வா் கண்டனம்: காங்போக்பி மாவட்டத்தில் கிறிஸ்தவ அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வா் கேம்சந்த் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

‘இந்த வன்முறைச் செயல், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. அமைதியை நோக்கிய நமது பயணத்தை இத்தகைய தாக்குதல்கள் சீா்குலைக்கின்றன. மாநிலத்தில் இயல்புநிலையை மீட்டெடுக்கும் நமது முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் ஏற்க முடியாது. தீவிரவாதத்துக்கு எதிரான மாநில அரசின் போராட்டம் உறுதியானது. அமைதியை நிலைநாட்ட அனைத்து சமூகத்தினரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா் அவா்.

இதனிடையே, பாதிரியாா்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, காங்போக்பி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பதற்றமான சூழல் காரணமாக, இந்த மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.