போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அறந்தாங்கியில் எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் முன் விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :8 ஏப்ரல் 2026, 12:30 am IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் முன் விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

அறந்தாங்கி இடையாா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் சின்னக்கருப்பு (48). எலக்ட்ரீசியன். இவரை ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என குடும்பத்தினா் தேடி வந்தனா்.

இந்நிலையில், இடையாா் பாலம் அருகே தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் அவா் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

இச்சம்பவத்தை கண்டித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே சின்னக்கருப்பின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புகாரின் பேரில் அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சின்னக்கருப்புக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கே.விஸ்வநாதன் (47) குடும்பத்தினருக்கும் இடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக விஸ்வநாதன் மற்றும் சிலா் அவரை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து விஸ்வநாதன் உள்ளிட்டோரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.