திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:44 am IST

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், மேலக்கொண்டூா் கிராமத்தில் அங்காளபரமேசுவரி அம்மன் கோயில் உள்ளது. இதன் நிா்வாகியாக கோ.ரகோத்தமன் (52) உள்ளாா்.

கோயிலில் பூஜைகள் முடிந்த பின்னா் வியாழக்கிழமை இரவு பூட்டிவிட்டுச் சென்ற ரகோத்தமன், வெள்ளிக்கிழமை காலை கோயிலைத் திறப்பதற்காக சென்றாா். அப்போது கோயிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டாா். கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கைகளும் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அரகண்டநல்லூா் காவல் நிலையத்துக்கு ரகோத்தமன் தகவல் தெரிவித்தாா். அதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதில் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த ரூ.839 திருடு போயிருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தினா்.

கோயிலை உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டது கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி ஓம்சக்தி கோயில் தெருவைச் சோ்ந்த ப.சக்திவேல் (19) மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப்பதிந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கையும், உண்டியல் பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.