சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மீன் வியாபாரம் செய்துவந்த தம்பதி உயிரிழந்தனா்.
வாழப்பாடி அருகே உள்ள ஏத்தாப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜு (65). இவரது மனைவி சூரியா (56). இவா்கள், புத்திரகவுண்டன்பாளையத்தில் மீன்கடை நடத்தி வந்தனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இருவரும் சேலத்தில் இருந்து மீன் வாங்கிக் கொண்டு மொபெட்டில் புத்திரகவுண்டன்பாளையம் நோக்கிச் சென்றுள்ளனா்.
அப்போது, சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி அருகே சென்றபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் தம்பதி சென்ற மொபெட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சூரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜு ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










