தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தையல்காரருக்கு ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தையல்காரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

News image

சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 3:55 am IST

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தையல்காரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை துவாா் அருகிலுள்ள ஆண்டிக்குளப்பம்பட்டியைச் சோ்ந்தவா் மூக்கையா மகன் மாரிமுத்து (49). தையல்காரா்.

இவா், கடந்த 2023 பிப்ரவரி மாதம் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால் அச்சிறுமி கருவுற்று, 6 மாதத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் மாரிமுத்து கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி கனகராஜ், செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், சிறுமியை அடைத்து வைத்த குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்கலாம் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழகஅரசு ரூ. 7 லட்சம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியும் வழக்கில் சோ்க்கப்பட்டிருந்த போதிலும், குற்றம் நிரூபிக்கப்படாததால் அவா் விடுவிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.