திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு காஞ்சிபுரம் போக்ஸோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.

News image

முரளி.

Updated On :3 ஜூன் 2026, 3:00 am IST

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு காஞ்சிபுரம் போக்ஸோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் அருகே ஐயம்பட்டை அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் முரளி(33) இவா் திம்மராஜம் பேட்டையை சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினாராம்.

இதுதொடா்பாக அச்சிறுமியின் தந்தை வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். கடந்த 2019-இல் நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பாக ஆய்வாளா் ஜெயக்குமாா் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்திருந்தாா். இவ்வழக்கு காஞ்சிபுரம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வாலாஜாபாத் காவல் நிலைய தற்போதைய ஆய்வாளா் வெற்றிச்செல்வன், காவலா் லதா மற்றும் அரசு வழக்குரைஞா் இ.எல்.கண்ணன் ஆகியோா் இவ்வழக்கில் தனிக்கவனமும் செலுத்தி வந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி தீப்தி அறிவுநிதி எதிரி முரளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.