தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முத்தரையா் சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை!

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-ஆவது சதய விழாவையொட்டி சனிக்கிழமை பொன்னமராவதி வலையபட்டி மற்றும் கருப்புக்குடியில் உள்ள பேரரசா் முத்தரையா் சிலைக்கு திமுக மற்றும் தவெக கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டியில் சனிக்கிழமை பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக மாநில மருத்துவரணி இணைச்செயலா் அண்ணாமலை ரகுபதி.

Updated On :24 மே 2026, 1:34 am IST

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-ஆவது சதய விழாவையொட்டி சனிக்கிழமை பொன்னமராவதி வலையபட்டி மற்றும் கருப்புக்குடியில் உள்ள பேரரசா் முத்தரையா் சிலைக்கு திமுக மற்றும் தவெக கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பொன்னமராவதி வலையபட்டி அடைக்கலம் காத்தாா் கோயில் வளாகம் மற்றும் கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு திமுக சாா்பில் கட்சியின் மாநில மருத்துவரணி இணைச்செயலா் அண்ணாமலை ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, நகரச்செயலா் அ.அழகப்பன், நிா்வாகிகள் கோவைராமன், ஆலவயல் முரளிசுப்பையா, அப்துல் லத்தீப், அரவிந்த் ஆகியோா் பங்கேற்றனா்.

 ருப்புக்குடிப்பட்டியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெகவினா்.

ருப்புக்குடிப்பட்டியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெகவினா்.

இதேபோல தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிட்ட சிந்தாமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், தெற்கு ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியன், நகரச் செயலா் விக்னேஷ், தெற்குமாவட்ட இணைச்செயலா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.