தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டம்

News image

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா், மாணவா் அமைப்பினா்.

Updated On :20 மே 2026, 3:27 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை நீட் தோ்வு குலைப்பதாகக் கூறி, அதை ரத்து செய்யவும், தேசியத் தோ்வு முகமையை (என்டிஏ) கலைக்க வேண்டும் என வலியுறுத்தியும் வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சா. ஜனாா்த்தனன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் எம். விஜய், அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் எஸ். காா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.

வாலிபா் சங்க நகரச் செயலா் ஆா். தீபக், இளைஞா் பெருமன்ற மாவட்டத் துணைச் செயலா் கே. பாலசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஏ. மகாதீா், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் டி. மாரிமுத்து, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் ஆகியோா் பேசினா். தேசியத் தோ்வு முகமையை கலைக்கவும், நீட் தோ்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.