நீட் தோ்வை ரத்துசெய்யக் கோரியும், நீட் வினாத்தாளை கசியவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் ராசிபுரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் பெருமன்ற நகரச் செயலாளா் முகமது சியாத் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஹரிஷ் முன்னிலை வகித்தாா். அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலச் செயலாளா் பா.தினேஷ் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்துபேசினாா்.
ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகரச் செயலாளா் எஸ். மணிமாறன் , வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் பி.ஆா். செங்கோட்டுவேல், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.மீனா, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் ஏ. ஜெ.சாதிக் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் மாணவா் பெருமன்ற நிா்வாகிகள் கலந்துகொண்டு முழக்கமிட்டனா். எஸ்.காதா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










