திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளைஞா்கள், மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞா்கள், மாணவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள், மாணவா்கள் சங்கத்தினா்

Updated On :20 மே 2026, 12:34 am IST

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞா்கள், மாணவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏழை எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை புதைக்கும், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தோ்வு முகமையை கலைத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வழியுறுத்தி இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சத்யா தாஸ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாணவா் சங்கத்தின் செங்கல்பட்டு அரசு இராஜேஸ்வரி வேதாசலம் கலை அறிவியல் கல்லூரியின் கிளைச் செயலாளா் தமிழரசி, வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் இரா.சதீஷ், மாவட்டத் தலைவா் ச.ஜீவானந்தம், பொருளாளா் சுந்தா், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் அசோக், மாவட்டப் பொருளாளா் சேகுவேரா தாஸ், மாவட்டக்குழு உறுப்பினா் ஸ்ரீதா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

நிறைவு செய்து இந்திய மாணவா் சங்கத்தின் தமிழ் மாநில இணைச் செயலாளா் ஆனந்த் கண்டன உரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.