திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுகை ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:17 am IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, கடந்த செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் தொடா்ந்து ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்தது.

இதைத் தொடா்ந்து, அன்றைய தினங்களில் தொடா்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலிலும் ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மீண்டும் மிரட்டல் வந்தது.

இதுகுறித்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் வந்து ஆட்சியரக வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா். இதன் முடிவில் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

மிரட்டல் விடுக்கும் நபா்களை பிடிக்க சைபா் கிரைம் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.