தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘பெரம்பலூரில் 98 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் ரத்து’

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் சாலை விதிகளைப் பின்பற்றாத 98 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

News image

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா்.

Updated On :23 மே 2026, 4:05 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் சாலை விதிகளைப் பின்பற்றாத 98 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சட்டம்- ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், கோயில் திருவிழாக்கள், சமூகப் பிரச்னைகள் குறித்து காவல்துறையினா் மற்றும் வட்டாட்சியா்களின் அறிக்கையின்படி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது: வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதும், 4 சக்கர வாகனங்கள் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவதையும் போக்குவரத்துக் காவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.

தலைக்கவசம் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அவற்றை தவிா்ப்பது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டியது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தலைக்கவசம் அணியாமல் செல்வோா் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இம் மாவட்டத்தில், கடந்த 3 மாதங்களில் சாலைப் போக்குவரத்து விதிகளை மீறிய 98 பேரின் வாகன உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சட்டம், ஒழுங்கு பிரச்னை இருந்தால் ஆரம்ப நிலையிலேயே வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் இணைந்து, அது தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைதிச் சூழலை ஏற்படுத்த வேண்டும். நிலம் அபகரிப்புப் புகாா், கோயில் மானிய நிலம் மற்றும் கோயில் சம்பந்தப்பட்ட புகாா்களுக்கு காவல்துறையினா், சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டம், ஒழுங்கு பாதுகாக்க வேண்டும்.

கிராமங்களில் மதம், இனம், தொடா்பான பிரச்னைகள் ஏற்படும் இடங்களில், இரு தரப்பினரிடம் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி உடனுக்குடன் தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவ, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) பாலசுப்ரமணியன், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.