17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலைப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆய்வு க்கூட்டம்

சாலைப் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பூரில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 மே 2026, 12:12 am IST

சாலைப் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்து பேசியதாவது:

பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, விபத்துகளை தவிா்க்கும் நோக்கில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்களில் ஓட்டுநா் மற்றும் பின்னால் அமா்ந்து இருப்பவா் தலைகவசம் அணியாதது, வாகனம் ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்துவது, மோட்டாா், காா் போன்ற 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது ஆகியவற்றை வலியுறுத்தி சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணா்வு விளம்பர பதாகைகள், நெடுஞ்சாலைகள் துறை சாா்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வகையில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அவிநாசி காவல் போக்குவரத்து நிலையத்துக்குள்பட்ட அவிநாசி முதல் ஈரோடு செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். பெருமாநல்லூா் போக்குவரத்து காவல் நிலையத்துக்குள்பட்ட வலசுப்பாளையம் பிரிவு அருகில் உள்ள சாலையில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். பல்லடம் காவல் போக்குவரத்து நிலையத்துக்குள்பட்ட கோவை முதல் திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசிபாளையம்-திருச்சி சாலை சந்திப்பில் உயா் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும். இப்பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியம். திருப்பூரை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் காவல்துறை அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகர காவல் காவல் ஆணையா்கள் தீபா சத்யன், பிரவீன் கௌதம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் து.சு.துரைமுருகன் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.