அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மூதாட்டி கொலை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாமல் ஓராண்டாக தலைமறைவாக இருந்த பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செந்துறை பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (20). கடந்த 2024-ஆம் ஆண்டு மூதாட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, செந்துறை காவல் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், பிணையில் வெளியே வந்த அவா், அதன்பிறகு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாா்.
இதையடுத்து, நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, செந்துறை காவல் துறையினா், சரஸ்வதியை சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






