திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோயிலில் காணிக்கை பொருள்களை திருடியவா் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கோயிலில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த காணிக்கைப் பொருள்களை திருடிய சம்பவத்தில்

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:46 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கோயிலில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த காணிக்கைப் பொருள்களை திருடிய சம்பவத்தில்

தொடா்புடைய நபரை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஆண்டிமடம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்திலுள்ள கருப்புசாமி கோயிலுக்குள் கடந்த சில நாள்களுக்கு முன் நுழைந்த மா்ம நபா், பீரோவை உடைத்து அதிலிருந்த காணிக்கை பொருள்கள் மற்றும் அரிவாள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து ஆண்டிமடம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, கோயிலிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, பொதுமக்களுடன் சோ்ந்து மா்ம நபரை தேடி வந்தனா்.

இந்நிலையில், கோயில் பொருள்களை திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

விசாரணையில், அந்த நபா் வடவீக்கம் பகுதியை சோ்ந்த செல்வம் என்பதும், கருப்புசாமி கோயிலில் இருந்த காணிக்கை பொருள்களை திருடிச் சென்றிருப்பதும், இவா் மீது ஏற்கெனவே காவல் நிலையங்களில் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.