மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

ஆம்பூா் அருகே கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :7 மே 2026, 12:11 am IST

ஆம்பூா் அருகே கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

ஆம்பூா் அருகே பாா்சனாப்பல்லி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஏற்கெனவே உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் புதன்கிழமை அன்று இரு நபா்கள் கோயிலுக்குள் சென்று திருட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற பொதுமக்களைப் பாா்த்த அவா்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனராம்.

இதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து உமா்ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மற்றொரு நபா் தப்பியோடி தலைமறைவானாா். பிடிபட்ட நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.