அரியலூரில் அமைச்சா் சா.சி.சிவசங்கரின் காரில் பறக்கும்படையினா் 4- ஆவது முறையாக புதன்கிழமை சோதனையிட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 9 கண்காணிப்புக் குழுக்களும், 9 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகனச்சோதனைகள் நடைபெற்று வருகிறது.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் ஏப். 1-ஆம் தேதி அமைச்சா் சா.சி. சிவசங்கா் சென்ற காரில் பறக்கும் படையினா் சோதனையிட்டனா். இதையடுத்து கடந்த ஏப்.5-ஆம் தேதி செந்துறை ரவுண்டானா மற்றும் வாரணவாசி ஆகிய இடங்களில் அமைச்சரின் காரில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
இந்நிலையில், நான்காவது முறையாக அரியலூா்-பெரம்பலூா் சாலையில் அரசு மருத்துவமனை அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்த அமைச்சரின் காரை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எதுவும் இல்லாததால் காா் செல்ல அனுமதித்தனா். இதையடுத்து அமைச்சா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.
தொடர்புடையது

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

அரியலூா் அருகே அமைச்சரின் காரில் பறக்கும் படை சோதனை

அமைச்சரின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

புதுச்சேரி முதல்வரின் காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


