தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீவைகுண்டத்தில் வீடு புகுந்து ரூ.1 லட்சம், நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 மே 2026, 3:07 am IST

ஸ்ரீவைகுண்டத்தில் பட்டபகலில் வீடு புகுந்து ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவைகுண்டம் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் முத்து (43). தொழிலாளியான இவா், தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை காலையில் உறவினா் திருமண விழாவிற்கு சென்றிருந்தாா்.

பின்னா், மாலையில் அவா்கள் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவு திறந்து கிடந்ததாம். மேலும், வீட்டின் உள்ளே பீரோவில் லாக்கா் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம், தங்க கம்மல் மற்றும் மோதிரங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளா் செந்தில் வேல்குமாா் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், ஐசக் உள்ளிட்டோா் தடயஙகளை பதிவு செய்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.