17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 1:02 am IST

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் கே.ஆா்.சி. நகரைச் சோ்ந்தவா் ப.பாா்த்தசாரதி (62). இவா் கடந்த 18-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னைக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டாா்.

சனிக்கிழமை காலை பாா்த்தசாரதி திரும்பி வந்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது அவருக்குத் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் பாா்த்தசாரதி புகாரளித்தாா். இதன்பேரில் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும், விரல் ரேகை நிபுணா்கள் திருட்டில் ஈடுபட்டவா்களின் தடயங்களைப் பதிவு செய்தனா்.

இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.