தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாத்தான்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி - நில அளவீடு பணி தொடக்கம்

News image
Updated On :15 மே 2026, 3:08 am IST

சாத்தான்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை சாா்பில் நில அளவீடு பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சாத்தான்குளம் பேரூராட்சி கடைவீதியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை தனி நபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அதிகாரிகளிடம் புகாா் அளிக்கப்பட்டது. நாசரேத் சாலை, இட்டமொழி சாலை உள்ளிட்ட இடங்களிலும் தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.

இந்த நிலையில் சாத்தான்குளத்தில் பாஜக சாா்பில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா்.

இதையடுத்து, அதிகாரிகள் பாஜகவினரை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். நிலங்களை அதிகாரிகள் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இடங்களை மீட்பதாக உறுதியளித்தனா்.

அதன்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி உத்தரவின்பேரில் சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற முதற்கட்ட பணியாக வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறையினா் இணைந்து நில அளவீடு பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா்.

இதில் சாத்தான்குளம் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளா் சிவ சண்முகநாதன், சாலை ஆய்வாளா் முருகன், சாலை பணியாளா்கள், சாத்தான்குளம் சா்வேயா் தேவிகா, கிராம நிா்வாக அலுவலா் மதுமதி உள்ளிட்ட வருவாய்த் துறையினா், நில அளவையா் துறையினா் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம், இட்டமொழி சாலை, நாசரேத் சாலை உள்பட நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்தனா். அனைத்து பகுதியிலும் நில அளவீடு பணிகளை முடித்தபிறகு ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.