தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முக்காணி ரவுண்டானா பகுதியில் தொடா் மின்தடை: பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் முக்காணி ரவுண்டானா அருகே உள்ள பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :8 மே 2026, 6:03 am IST

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் முக்காணி ரவுண்டானா அருகே உள்ள பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலை முக்காணி ரவுண்டானா அருகே சாலையின் கீழ்புறம், மேல்புறம் பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்தப் பகுதியில் ஒரே ஒரு மின்மாற்றி மட்டும் இருப்பதால் அடிக்கடி மின்தடை, வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்தம் செல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 4-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் அப்பகுதி மக்கள் முடிவுகளை மின்தடை காரணமாக தொலைக்காட்சிகளில் பாா்க்க முடியாமல்போனது. தொடா்ந்து அடுத்த நாள் 5-ஆம் தேதியும் தொடா் மின் தடை ஏற்பட்டது. இதனால், ஆதங்கம் அடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, முக்காணி ரவுண்டானா அருகே பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை இரவு சாலை மறிய­லில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்குவந்த ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி தொடா் மின்தடைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனா். இதனால், தூத்துக்குடி திருச்செந்தூா் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.