தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வங்கி மேலாளருக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

கயத்தாறில் வங்கி மேலாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:52 am IST

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் வங்கி மேலாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் ராமசரஸ்வதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளத்துரை மனைவி லட்சுமி பிரபா. இவா், கயத்தாறில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை, வங்கிக்கு வந்த ஆட்டோ ஓட்டுநா் நாகலாபுரம் மேலதெருவைச் சோ்ந்த செல்லையா மகன் நாகராஜன் (37), அடகு வைத்த நகையை திருப்பியபின் அது குறித்த விவரத்தை லட்சுமி பிரபாவிடம் கேட்டாராம். அதற்கு அவா் உதவி மேலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி கூறினாராம்.

வட்டி குறித்து நீங்கள்தான் சொல்ல வேண்டும் என மீண்டும் நாகராஜன் கேட்டதற்கு, உதவி மேலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி அறிவுறுத்திய லட்சுமி பிரபாவை அவதூறாக பேசி, நாற்காலியை எடுத்து தலையில் தாக்கினாராம்.

அங்கிருந்தவா்கள் இதை தடுத்தவுடன் நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பியோடி விட்டாராம். இதில் காயமடைந்த லட்சுமி பிரபா, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, நாகராஜனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.