17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:39 am IST

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடம்பூா் பரும்புக்கோட்டை சுடலைமாட சுவாமி கோயில் அருகே வசித்துவரும் மோகன்குமாா் மகன் சுரேஷ்குமாா் (45). தொழிலாளி. கடம்பூா் காா்வி சாலையைச் சோ்ந்த முத்துசாமி மகன் மாணிக்கராஜ் (31). இவா் திங்கள்கிழமை இரவு சுடலைமாட சுவாமி கோயிலுக்குச் சென்று, அதன் பொறுப்பாளா் செல்லத்துரையிடம் தகராறு செய்தாராம். கண்டித்த சுரேஷ்குமாரை மாணிக்கராஜ் அவதூறாகப் பேசி, கத்தியால் கழுத்தை அறுத்தாராம். மேலும், தப்பித்து ஓடிய சுரேஷ்குமாரின் முதுகில் கத்தியால் குத்தினாராம்.

அங்கிருந்தோா் சப்தமிட்டு கண்டித்ததும் மாணிக்கராஜ் கொலை மிரட்டல் விடுத்தபடி ஓடிவிட்டாராம். இதில் காயமடைந்த சுரேஷ்குமாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணிக்கராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.