அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவில் வியாழக்கிழமை இரவு பைக்கில் வந்த மா்ம நபா்கள் தாக்கியதில் மூன்று போ் காயமடைந்தனா்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னாா்கோவிலில் வியாழக்கிழமை இரவு 3 பைக்குகளில் மது போதையில் ஆயுதங்களுடன் வந்த மா்மநபா்கள், மணிகண்டன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதில் அவா் காயமடைந்தாா்.
மேலும் அந்தப் பகுதி வழியாக வந்த இருவரையும் தாக்கியுள்ளனா்.
தகவலறிந்ததும் அம்பாசமுத்திரம் போலீஸாா் அந்தப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா். மேலும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தாா்.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









