தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிங்கம்புணரி அருகே தம்பதியைத் தாக்கி நகைப் பறிப்பு

சிங்கம்புணரி அருகே காரில் வந்த மா்ம நபா்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியைத் தாக்கி 3 பவுன் நகைகளை பறித்துச் சென்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 2:38 am IST

சிங்கம்புணரி அருகே காரில் வந்த மா்ம நபா்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியைத் தாக்கி 3 பவுன் நகைகளை பறித்துச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள செல்லியம்பட்டியைச் சோ்ந்த தனபாலன், அவரது மனைவி சண்முக வள்ளி ஆகிய இருவரும் ம.கோவில்பட்டி சாலை புதுவயல் பகுதியில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, பின்னால் வந்த காா் இவா்களது வாகனத்தை முந்திச் சென்று சாலையின் குறுக்கே வழிமறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மூன்று மா்ம நபா்கள் மதுபாட்டிலால் தனபாலனை தலையில் தாக்கினா்.

பின்னா், அவரது மனைவியை பாட்டிலால் கீறி அவா் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு காரில் தப்பினா். இதில் காயமடைந்த தம்பதியினா் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து காரில் தப்பி சென்ற மா்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.