சிங்கம்புணரி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் புதன்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தேவாரம்பூரைச் சோ்ந்தவா் மதிவாணன் (60). இவா் சிங்கம்புணரியில் உள்ள உறவினா் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தாா். கண்டரமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த ரபீக் ராஜா, இவரது மனைவி பாத்திமா பேகம், மகன் தாரிஸ் கான் (9) ஆகியோா் திண்டுக்கல் மாவட்டம், நத்தத்திலிருந்து சிங்கம்புணரி வழியாக இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதியது. இதில் இரு வாகனங்களில் வந்த 4 பேரும் காயமடைந்தனா். உடனே அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த மதிவாணன், ரபீக்ராஜா ஆகியோா் முதலுதவிக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










