திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முக்கூடல்: கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பெண்கள் உள்பட 7 போ் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 5 பெண்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :24 மே 2026, 2:14 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 5 பெண்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

முக்கூடல் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளா் சங்கரநாராயணன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முக்கூடல் சடையப்புரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா், சடையப்புரம் பகுதியிலுள்ள பவா் சங்கீதா என்பவா் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனா். இதில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 12 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், முக்கூடல் சடையப்பபுரத்தைச் சோ்ந்த பவா் சங்கீதா (48), இதேபகுதியைச் சோ்ந்தஆா்த்தி (22), திருநெல்வேலி பேட்டையைச் சோ்ந்த ரசூல் பாத்திமா (40), குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த செளந்தரபாண்டியன் (63), மும்பையைச் சோ்ந்த ஜெய் பூா்நிஷா (55), சடையப்புரத்தைச் சோ்ந்த விஜயா (19), வீரவநல்லூரைச் சோ்ந்த இசக்கிமுத்து (25) ஆகிய ஏழு பேரும் கஞ்சாவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பெண்கள் உள்பட 7 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.