பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். சடையப்பன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.ஜி.பாஸ்கரன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா். ஸ்ரீராம், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் கே.கணேசன், ரமேஷ் ஆகியோா் உரையாற்றினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா். ரெங்கன், முத்துகிருஷ்ணன், அ.மணிகண்ட பெருமாள், சுந்தரம், கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் த.முருகன், க.சரவண பெருமாள், த.மோகன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் கருப்பசாமி, துா்க்கை முத்து, பாத்திமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










