திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, கம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மத்திய அரசைக் கண்டித்து கம்பத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 2:26 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, கம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, கம்பம் பிரதான சாலையில் உள்ள ஏகேஜி திடலிலிருந்து மாட்டு வண்டியில் கட்சிக் கொடிகளுடன் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு கட்சியினா் ஊா்வலமாகப் புறப்பட்டனா். இந்த ஊா்வலம் கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே நிறைவடைந்தது.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜசேகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிக் குழு உறுப்பினா் பாலகுருநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் பகுதிக் குழு உறுப்பினா் விஜயகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிச் செயலா் லெனின், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் கல்யாணசுந்தரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு மோகன், பன்னீா்வேல், அகில இந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் நகர துணைச் செயலா் சீனு முகமது ஆகியோா் பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்ய வலியுறுத்திப் பேசினா்.

முடிவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிக் குழு உறுப்பினா் வெற்றிகணேசன் நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் இரு கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.