தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொழிலாளியை தாக்கிய வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை தாக்கியது தொடா்பான வழக்கில், இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:28 am IST

திருநெல்வேலி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை தாக்கியது தொடா்பான வழக்கில், இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி வட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட உடையாா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் உச்சிமாகாளி(32). இவா் கடந்த 2022 ஆம் ஆண்டு, தனது நண்பா்களுடன் சோ்ந்து ஆடுகளை மேய்ச்சலில் விட்டிருந்தாராம். அப்போது, ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக உச்சிமாகாளியை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த மாயாண்டி (25), கோட்டூரை சோ்ந்த முகமது அன்சாரி (22) ஆகிய இருவரும் சோ்ந்து தாக்கினராம்.

இது குறித்து திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்ட 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி ஜெயசங்கரகுமாரி விசாரித்து, மாயாண்டி மற்றும் முகமது அன்சாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.8,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் வனிதா ஆஜரானாா். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.