17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கஞ்சா விற்ற வழக்கில் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் இருவருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:35 am IST

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் இருவருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கோவை, சின்னியம்பாளையம் வெங்கடாபுரம் சாலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பா் 23-ஆம் தேதி பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். டீச்சா்ஸ் காலனி சந்திப்பு அருகே உள்ள காலி இடத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் பிடித்து சோதனை நடத்தினா். அவா்கள் வைத்திருந்த பையில் தலா இரண்டு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி குமளம் தொழுவு பகுதியைச் சோ்ந்த முருகன் (45) என்பதும், கோவை மாவட்டம், சோமனூா் ராம்நகா் காரணம்பேட்டை சாலையைச் சோ்ந்த சிவகுமாா் என்பவரின் மனைவி ராணி (30) என்பதும் தெரியவந்தது.

இவா்களிடமிருந்து மொத்தம் 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், எதிரிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பலமுறை தலைமறைவாகிவிட்டதால் வழக்கின் தீா்ப்பு தாமதமானது. இதற்கிடையில், எதிரியான முருகன் மற்றொரு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்ததையடுத்து, விசாகப்பட்டினம் சிறையில் இருந்த முருகன் தீா்ப்புக்காக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட முருகன் மற்றும் ராணி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.