17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேலப்பாளையத்தில் மருத்துவரைத் தாக்கி சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

திருநெல்வேலி மேலப்பாளையம் காட்டுப்பகுதியில் மருத்துவரைத் தாக்கி தங்கச் சங்கிலி, பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2026, 1:15 am IST

திருநெல்வேலி மேலப்பாளையம் காட்டுப்பகுதியில் மருத்துவரைத் தாக்கி தங்கச் சங்கிலி, பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் அஜித்குமாா் ( 27). அருப்புக்கோட்டையில் தனியாா் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தாா். அப்போது அவரிடம் கைப்பேசி செயலி மூலம் அறிமுகம் ஆன நபரை பாா்க்க சென்றுள்ளாா்.

அந்த நபா் அஜித்குமாரை பைக்கில் ஏற்றிக்கொண்டு மேலப்பாளையம் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்ாகக் கூறப்படுகிறது. அங்கு மறைந்திருந்த சிலா் அவரை கைப்பேசியில் விடியோ எடுத்து மிரட்டி, தாக்கி 4 பவுன் தங்க சங்கிலி, அவரது ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ. 48 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பினராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து ஏற்கெனவே சிலரை கைது செய்திருந்தனா். இந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய நபரான தாழையூத்து சங்கா்நகரைச் சோ்ந்த மலையாண்டி மகன் கல்யாணசுந்தரம் (19) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.