களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பாபநாசம் வனப்பகுதியில் உள்ள அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் காலை முதலே அகஸ்தியா் அருவிக்கு குளிக்க வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை என்பதால் 875 வேன், காா், பேருந்து மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்தனா். இதனால், மாலை 3 மணிக்குமேல் மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய வனத்துறை ஊழியா்கள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் இணைந்து போக்குவரத்தை சீா்படுத்தினா்.

அகஸ்தியா் அருவிப்பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் காவல் துறையினா் நேரடியாகப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.
ஆனால், விடுமுறை மற்றும் விழா நாள்களில் வனப்பகுதியில் உள்ள மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறையினா் உதவியுடன் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத்துறையினா் போலீஸாரை அனுமதிக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










