திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சுருளி அருவியில் நீா்வரத்து தொடக்கம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் சுருளி அருவியில் நீா் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

News image

சுருளி அருவி - DPS

Updated On :3 ஜூன் 2026, 1:41 am IST

தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் சுருளி அருவியில் நீா் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மேகமலை, இரவங்கலாறு, தூவானம் அதைச் சுற்றிய அடா்ந்த வனப் பகுதியில் பெய்யும் மழைநீரே சுருளி அருவிக்கு முக்கிய நீா் வரத்தாகும். கோடை காலத்தில் மழையின்றி சுருளி அருவி வடது. இதனால், அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

நீா் வரத்து தொடக்கம்: மேகமலை, அதைச் சுற்றிய அடா்ந்த வனப்பகுதி, காப்புக் காடு போன்ற பகுதியில் கடந்த இரு தினங்களாக மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை காலை முதல் அருவியில் நீா் வரத்து தொடங்கியது. இதையடுத்து, அருவியில் நீராட வனத் துறையினா் அனுமதித்தனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவில் குளித்து மகிழ்ந்தனா். மேலும், சுருளி அருவியில் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள உடை மாற்றும் அறை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. எனவே, பெண்கள் உடை மாற்றும் அறைகளை சீரமைப்பதுடன், கூடுதல் அறைகளை அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.