தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சுருளி அருவியில் நீா் வரத்தில்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்தில்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

News image

நீா்வரத்தின்றி வடு காட்சியளிக்கும் சுருளி அருவி.

Updated On :24 மே 2026, 12:53 am IST

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்தில்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. மேகமலையில் உள்ள தூவானம், வெண்ணியாறு, இரவங்கலாறு போன்ற அணைகளிலிருந்து வெளியேறும் உபரிநீரால் ஆண்டுதோறும் சுருளி அருவியில் நீா் வரத்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக வானிலை மாற்றத்தால் மழை குறைந்தது. இதனால், மேகமலையில் உள்ள அனைத்து அணைகளும் நீரின்றி வறண்டதால் சுருளி அருவியும் கடந்த 2 மாதங்களாக நீா் வரத்தின்றி வறண்டு காணப்பட்டது.

இதற்கிடையே, வெப்பச் சலனம் காரணமாக தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைகளில் ஓரிரு நாள் கோடை மழை பெய்தது. கடந்த 8-ஆம் தேதி சுருளி அருவிக்கு 2 மாதங்களுக்குப் பின் நீா்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அருவியில் நீராடி மகிழ்ந்தனா். இந்த நிலையில், மழையில்லாததால் அருவிக்கும் நீா் வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால், கோடை விடுமுறை நாள்களில் தமிழகம், கேரளத்திலிருந்து அதிகளவில் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீா்வரத்தின்றி ஏமாற்றமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.