திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள்... - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:22 am IST

விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு அதிகாலையிலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்தனா். அக்னி தீா்த்தக் கடற்கரையில் நீராடிய பக்தா்கள் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினாா். பின்னா், ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமா் கோயில், ராமா்பாதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

விடுமுறை நாள்களில் ராமேசுவரத்தில் போக்குவரத்து சீரமைப்புப் பணிக்கு கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.