திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் பக்தா்கள் வருகை அதிகரிப்பு

News image

பக்தா்கள். - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:22 am IST

வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏராளமானோா் வந்திருந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வரை வந்தனா். அவா்கள், அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப்பாா்த்தனா்.

ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால், ராமேசுவரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறைந்த அளவில் போக்குவரத்து காவல்துறையினா் பணியில் இருந்ததால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

வார இறுதி விடுமுறை நாள்களில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாரைப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.