தொடா் விடுமுறையையொட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெப்பமும், மாலை, இரவு நேரங்களில் குளுமையான சீதோஷ்ன நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் தினசரி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
இவா்கள் வெள்ளிநீா் அருவி,பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, கோக்கா்ஸ்வாக், மோயா்பாயிண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், பேரிஜம், மன்னவனூா்சூழல் மையம், பூம்பாறை இயற்கை எழில்காட்சி, கூக்கால், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுப்பாா்த்தனா்.
மேலும், கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.
போக்குவரத்து நெரிசல்:
விடுறையையொட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை, அப்சா்வேட்டரி, பிரையண்ட் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், இந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடவசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
எனவே, சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடவசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

நீா்மட்டம் சரிவு: தேக்கடி ஏரியில் படகு சவாரிக்கு கட்டுப்பாடுகள் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


