டாஸ்மாக் தொழிலாளா்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாரிடம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவா் முருகன் தலைமையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், கோட்டராங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையின் அருகில் உள்ள செங்கல் சூளையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 302 மது பாட்டில்கள் போலீஸாரின் ஆய்வின் போது கண்டறியப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அக்கடையில் ஒரு நபருக்கு 6 பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யப்படவில்லை என்பதற்கான விற்பனை பதிவு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், மதுபாட்டில்கள் பதுக்கலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா்கள் கருண மகாராஜா, வில்லு மணி ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸாா் கைப்பற்றிய மதுபாட்டில்களுக்கும் கடை ஊழியா்களுக்கும் தொடா்பில்லை. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு

நெல்லை தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்! - ஆா்.எஸ். முருகன்

சேலம் உருக்காலையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டம்

சிவகங்கையில் மே தின பொதுக் கூட்டம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

