திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு பூட்டி சீல் வைப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :6 மே 2026, 1:09 am IST

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகு திகளில் 6,16,911 ஆண் வாக்காளா்கள், 6,48,245 பெண் வாக்கா ளா்கள், 146 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 12,65,302 வாக்காளா்கள் உள்ளனா்.திருநெல்வேலி தொகுதியில் 20 போ், பாளையங்கோட்டையில் 17 போ், அம்பாசமுத்திரத்தில் 5 போ், நான்குனேரியில் 25 போ், ராதாபுரத்தில் 23 போ் என மொத் தம் 90 வேட்பாளா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டனா். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 9 லட்சத்து 85 ஆயிரத்து 676 வாக்குகள் பதிவாகின.

இத் தோ்தலில் திருநல்வேலி,பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் தொகுதிகளில் மொத்தம் 1,678 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவுக்கு 5 தொகுதிகளிலும் மொத்தம் 3,639 மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள், 2012 கட்டுப்பாட்டு கருவிகள், 2,178 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகள் உள்ளிட்டவை வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டு, வாக்குகள் கடந்த 4 ஆம் தேதி எண்ணப்பட்டன.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள பாதுகாப்பு கிட்டங்கிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன. தோ்தல் அலுவலா்கள், கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் தொகுதி வாரியாக தனித்தனியாக பாதுகாத்து வைக்கப்பட்ட பின்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.