தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க வைக்க மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் வெற்றி தொடர்பான புகார் மனுக்களின் மீது உயர்நீதிமன்றம் இறுதி செய்யும் வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்படும் இறுதியாக தீர்ப்பு வழங்கும் வரை பாதுகாப்பாக தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்
இதுதொடர்பாக தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி 62 வாக்கு எண்ணும் மையங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் /தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. வாக்கு நடைமுறையின்போது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் / தேர்தல் முகவர்களும் வாக்கு எண்ணுகையிட முகவர்களும் இருந்தனர்.
வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எண்ணுகை வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின் வேட்பாளர்களின் அவர்களது பிரதிநிதிகளின் முன்னிலையில், கண்காணிப்புக் கேமரா மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பின் கீழ், வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளிலிருந்து (VVPATs) அவற்றின் சீட்டுகள் (VVPAT Slps) வெளியே எடுக்கப்பட்டு, சட்டப்படிக்கான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்காக கருப்பு நிற உறைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வேட்பாளர்கள் /அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பறையில் பாதுகாப்பாக வைப்பதற்கு முன்னர், வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டுள்ளன.
தேர்தல் புகார் மனுக்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் இறுதி செய்யும் வரையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறையின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
தேர்தல் புகார் மனு குறித்த நேர்வில், தேர்தல் புகார் மனு இறுதியாக தீர்வு செய்யப்படும் வரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
Summary
State Election Officer Archana Patnaik has stated that the Electronic Voting Machines (EVMs) will be kept securely, in light of complaints raised regarding the election results.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










